தேவனின் மந்தை ஊழியங்களில் நாங்கள், அப்போஸ்தலர் 17:11ல் எழுதியிருக்கிறபடி, விசுவாசிகள் எல்லாவற்றையும் நம்பி வஞ்சிக்கப்படாமல் கேட்கிறவைகளையும், வாசிக்கிறவைகளையும் வேதவாக்கியங்களோடு சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டுப்பார்த்து சத்தியத்தை அறியவும் கள்ள உபதேசங்களை இனங்கண்டு எச்சரிக்கையாய் இருக்கும்படியும் போதிக்கிறோம்.
தேவனின் மந்தை ஊழியங்களில் நாங்கள், 2 கொரிந்தியர் 11:4ல் உள்ள எச்சரிப்பை சுட்டிக்காண்பித்து சபைகள் பிசாசானவனின் தந்திரத்தால் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையில் இருந்து எளிதாக கெடுக்கப்பட முடியும் என்பதை அறிவுறுத்தி, பேதைகளாயிராமல் விழித்திருங்கள் என்றும் வேதத்தை ஆராய்ந்து பார்த்து மெய்யான இயேசு கிறிஸ்துவை பற்றிய சத்தியத்தை அறிந்திடுங்கள் என்றும் விசுவாசிகளை ஊக்குவிக்கிறோம்.
தேவனின் மந்தை ஊழியங்கள், ஆழமான வேதபாடங்களின் மூலம் கர்த்தருடைய வார்த்தையை நேசிக்கிற விசுவாசிகள் சத்தியத்தில் ஊன்றக் கட்டப்படவும், வேதவாக்கியங்களின் தெளிவைப் பெறவும், தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களுக்கு நிதானமாய் உத்தரவு சொல்லவும், வெட்கப்படாத ஊழியக்காரர்களாயும், சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறவர்களாயும், தேவனுக்கு முன்பாக உத்தமர்களாய் நிற்கவும், மற்ற ஜனத்தை ஆயத்தப்படுத்தவும் உதவுகிறது.
தேவனே விளையச் செய்கிறவர் என்று நாங்கள் விசுவாசித்து விதைக்கிறோம், தண்ணீர்ப் பாய்ச்சுகிறோம்; தேவன் தமது சித்தத்தின்படி விளையச் செய்யும்படி ஜெபித்து, தேவசமூகத்தில் காத்திருக்கிறோம்.