அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
கொலோசெயர்  1:15
I am the LORD, I change not    Malachi    3:6
நான் கர்த்தர், நான் மாறாதவர்    மல்கியா    3:6
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
நீதி  23:26
Commit your work to the Lord, and your plans will be established.    Proverbs  16:3
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.    நீதிமொழிகள்  16:3
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
நீதி 23:17
Happy are the poor in spirit: for the kingdom of heaven is theirs.    Matthew  5:3
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.      மத்தேயு 5:3
சபை நம்பிக்கையும் அறிக்கையும்
தேவனின் மந்தை சபையானது, பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியால் ஏவப்பட்டு தேவ மனிதர்களால் எழுதப்பட்ட பரிபூரண சத்தியமுள்ளது;இரட்சிக்கப் படுவதற்கு மனிதனை கிறிஸ்துவை நோக்கி நடத்துகிறது ;உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது; எல்லாவற்றின்மேலும் உறுதியும் இறுதியுமான அதிகாரம் பெற்றதுஎன்று விசுவாசிக்கும் சபையாகும்.

தேவனின் மந்தை ஊழியங்கள் இயேசுவே கிறிஸ்து என்றும், கிறிஸ்தேசுவே கர்த்தரென்றும், கர்த்தரே தேவனென்றும், தேவன் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் வேதவாக்கியங்களின் படிவிசுவாசிக்கிற,போதிக்கிற, அறிவிக்கிற சபையாகும்.
தேவன் :
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு; தேவன் ஆவியாயிருக்கிறார்; சிருஷ்டிகர், அதரிசனமானவர். ஆனால்இந்த தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்கிற சத்தியம் மகா மேன்மையான தேவ பக்திக்குரியது.

CHURCH BELIEF STATEMENT
Flock of God Ministries believe that “The Scriptures of the Bible, both Old and New Testaments, are the inspired Word of God and are the complete revelation of His will for the salvation of men and are the supreme and final authority for Christian faith and eternal life.”

Flock of God Ministries preaches and teaches that Jesus is Christ; Christ is the Lord; the Lord alone is God; God is one and besides him there is no other.

GOD
There is one God, who is the Spirit, Creator of all things and infinitely perfect. He is called Father. This God manifested in the flesh is great and the mystery of Godliness.

இலக்குரை:
கேட்கிறவர்கள் விடுதலையடையும்படி சத்தியத்தை அறிவித்தலும்,விசுவாசிக்கிறவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கும் படி சத்தியத்தை உபதேசித்தல்
இயங்குரை:
கேட்கிறவர்கள், “கர்த்தரே மெய்யான தேவன்" என்கிற வேதத்தின் அடிப்படையான சத்தியத்தை அறிந்து உணர்ந்து விசுவாசிக்கும்படி,தேவனுடைய வார்த்தைகளை அறிவிப்பதிலும் போதிப்பதிலும் உறுதியாய் இருத்தல்
குறிக்கோள்கள் & நோக்கங்கள்:
வேத வாக்கியங்கள், “கர்த்தரே தேவன்" என்று அறிவிக்கிறது

இயேசுவே, “கிறிஸ்து” என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தார்கள்

இயேசுவே, “ஒரே கர்த்தர்” என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தார்கள்

“தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்கிற சத்தியத்தை மகா மேன்மையான தேவ பக்திக்குரிய இரகசியம் என்று அப்போஸ்தலர்கள் அறிவித்தார்கள்

“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஒன்றான மெய்தேவன்” என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தார்கள்

கர்த்தராகிய இயேசு வேசத்தியம்; கேட்கிறமனிதன் நித்திய ஜீவனை அடையும்படி இவரையே நாங்கள்அறிவிக்கிறோம்

வேத வாக்கியங்களின்படி, “இயேசு கிறிஸ்துவின் மெய்யான நற்செய்தி” அறிவிப்பதே தேவனின் மந்தை ஊழியங்களில் குறிக்கோளாயிருக்கிறது
செயல்கள்:
தேவனின் மந்தை ஊழியங்களில் நாங்கள், அப்போஸ்தலர்17:11ல் எழுதியிருக்கிறபடி, எல்லாவற்றையும் நம்பி வஞ்சிக்கப்படாமல் கேட்கிறவைகளையும்,வாசிக்கிறவைகளையும் வேதவாக்கியங்களோடு சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டுப் பார்த்து சத்தியத்தை அறியவும் கள்ள உபதேசங்களை இனங்கண்டு விசுவாசிகள் எச்சரிக்கையாய் இருக்கும்படியும் போதிக்கிறோம்.

தேவனின் மந்தை ஊழியங்களில் நாங்கள், 2 கொரிந்தியர்11:4 ல் உள்ள எச்சரிப்பை சுட்டிக்காண்பித்து சபைகள் பிசாசானவனின் தந்திரத்தால் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையில் இருந்து எளிதாக கெடுக்கப்பட முடியும் என்பதை அறிவுறுத்தி, பேதைகளாயிராமல் விழித்திருங்கள் என்றும் வேதத்தை ஆராய்ந்து பார்த்து மெய்யான இயேசு கிறிஸ்துவை பற்றிய சத்தியத்தை அறிந்திடுங்கள் என்றும் விசுவாசிகளை ஊக்குவிக்கிறோம்.

தேவனின் மந்தை ஊழியங்களில், ஆழமான வேதபாடங்களின் மூலம், கர்த்தருடைய வார்த்தையை நேசிக்கிற விசுவாசிகள் சத்தியத்தில் ஊன்றக்கட்டப்படவும், வேதவாக்கியங்களின் தெளிவைப்பெறவும், தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களுக்கு நிதானமாய் உத்தரவு சொல்ல அறிந்திருக்கவும், வெட்கப்படாத ஊழியக்காரர்களாயும், சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறவர்களாயும், தேவனுக்கு முன்பாக உத்தமர்களாய் நிற்கவும் ஜனத்தை ஆயத்தப்படுத்துகிறோம், உதவிசெய்கிறோம். தேவனே விளையச் செய்கிறவர் என்று நாங்கள் விசுவாசித்து விதைக்கிறோம், தண்ணீர்ப் பாய்ச்சுகிறோம்; தேவன் தமது சித்தத்தின்படி விளையச் செய்யும்படி ஜெபித்து, தேவ சமூகத்தில் காத்திருக்கிறோம்.
copyright © 2021 by fgministries.in